குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை நாம் படிப்போம்
அக்டோபர் 6, 1997-ல் துவங்கும் வாரத்திலிருந்து, நம்முடைய சபை புத்தகப் படிப்பில் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை நாம் படிப்போம் என்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்காக நடைமுறையான வேதப்பூர்வ வழிகாட்டும் இந்தத் தொகுதிப் படிப்பை ஒருவரும் தவறவிட விரும்ப மாட்டோம். படிப்பு அட்டவணை அந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு பாராவையும் பைபிள் வசனத்தையும் முழுமையாக ஆராய்வதற்கு அனுமதிக்கிறது.
படிப்பின் முதல் வாரத்தில் முதல் அதிகாரம் முழுவதுமாக சிந்திக்கப்படும், ஏனென்றால் மேற்கோள் காட்டப்படாத சில வசனங்களே அதில் உள்ளன. இதே காரணத்தால், 15-ம் அதிகாரமும் ஒரே படிப்பில் சிந்திக்கப்படும். ஒவ்வொரு வாரமும் பாதி அதிகாரத்தை சிந்திப்பதற்காக, மற்ற எல்லா அதிகாரமும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். இதனால், இடக்குறிப்பு காட்டப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் வாசித்து கலந்தாலோசிக்கவும், அதே சமயத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் எப்படி பொருத்தலாம் என்பதை கவனமாக ஆராயவும் போதுமான அளவு நேரமிருக்கும்.
ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் உள்ள போதிக்கும் பெட்டியின் தகவல்களை கலந்தாலோசிப்பது இந்தப் படிப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். எனவே, பெட்டியில் இடக்குறிப்பு காட்டப்பட்டுள்ள வசனங்களையும் கேள்விகளையும் சிந்திப்பதற்கு போதியளவு நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
சபை புத்தகப் படிப்பு நடத்துபவர்கள் இந்தப் படிப்பை நடத்துவதற்காக விசேஷித்த கவனத்தை தயாரிப்பில் கொடுக்கும்படியும், புதியவர்கள் உட்பட, தங்கள் தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள எல்லாரையும், நன்றாக தயாரிக்கவும் தவறாமல் ஆஜாராகவும் பங்கெடுக்கவும் உற்சாகப்படுத்தும்படி துரிதப்படுத்தப்படுகின்றனர்.—om-TL 74-6.