விசேஷ மாநாட்டு தினத்தின் புதிய நிகழ்ச்சிநிரல்
1987-ம் வருடம் முதற்கொண்டு விசேஷ மாநாட்டு தினம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாள் நடத்தப்படும் இம்மாநாடுகள், நிச்சயமாகவே யெகோவாவின் ஊழியர்களுக்கும் அக்கறை காட்டும் ஆட்களுக்கும் புத்துயிரூட்டும் கூட்டங்களாக இருந்திருக்கின்றன. ஜனவரி 1999 முதல், விசேஷ மாநாட்டு தினத்தின் புதிய நிகழ்ச்சிநிரல் அளிக்கப்படவிருக்கிறது. அதில் இடம்பெறும் 9 பேச்சுகளும், எண்ணற்ற பேட்டிகளும் அனுபவங்களும் ஆவிக்குரிய விதத்தில் பயனளிப்பவையாய் இருக்கும்.
“யெகோவா அளிக்கும் உணவிற்கு மதித்துணர்வைக் காட்டுங்கள்” என்பது புதிய நிகழ்ச்சிநிரலின் தலைப்பாக இருக்கும். (ஏசா. 65:1; 1 கொ. 10:21, NW) யெகோவாவின் வணக்கத்திற்கே நம் வாழ்க்கையில் முதல் இடம் என்ற நம் தீர்மானத்தை அது மேலும் உறுதிப்படுத்தும். (சங். 27:4) சபைக் கூட்டங்கள் சம்பந்தமாக “நம்முடைய இருதயத்தின் விருப்பங்களை ஆராய்தல்” என்ற தலைப்பில் வட்டாரக் கண்காணி பேசுவார். “யெகோவா அளிக்கும் உணவை சாப்பிடுவதன்மூலம் ஆவிக்குரிய தன்மையைக் காத்துக் கொள்ளுதல்” என்பதே விசேஷ பேச்சாளரின் பேச்சாக இருக்கும். யெகோவாவின் அமைப்பிலுள்ள இளைஞர்கள், கடவுளை சேவிப்பதில் உறுதியுடன் நிலைத்திருப்பதற்கும் நடைமுறையான விதத்தில் உற்சாகமளிக்கப்படுவர். விசேஷ பேச்சாளர் அளிக்கவிருக்கும் முக்கியப் பேச்சின் தலைப்பு, “தைரியமாக சாட்சி கொடுப்பதற்கு ஆவிக்குரிய விதத்தில் தயாராய் இருத்தல்” என்பதே. ராஜ்யத்தைப் பற்றி தைரியமாக சாட்சி கொடுப்பதற்கு, சபைக் கூட்டங்களில் கிடைக்கும் உதவிகள் நம்மை எப்படி தயார்படுத்துகின்றன என்பதை அந்தப் பேச்சு விளக்கும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிநிரலில் இருந்து பயனடைவதென்றால் யாருக்குத்தான் கசக்கும்?
புதிதாக ஒப்புக்கொடுத்திருப்பவர்கள் முழுக்காட்டுதல் எடுக்க விரும்பினால், சீக்கிரத்திலேயே நடத்தும் கண்காணியிடம் அதைத் தெரிவிக்க வேண்டும். விசேஷ மாநாட்டு தின சகாப்தத்தில் நாம் 12-வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறோம். அதற்கு வரும் அனைவரும், இன்னும் செய்து முடிக்க வேண்டிய ஊழியத்திற்காக ஆவிக்குரிய விதமாய் புது தெம்பு அடைந்தவர்களாக உணருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.