உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/04 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
  • இதே தகவல்
  • காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து தொடர்ந்து பயனடையுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • எளிமையாக்கப்பட்ட சந்தா புதுப்பித்தல் முறை
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • சந்தாக்களைப் பெறுவதன் மூலம் யாவைத் துதியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தாக்களை தைரியமாகஅளிப்பதன் மூலம்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 7/04 பக். 3

கேள்விப் பெட்டி

◼ வீட்டுக்காரரை சந்திக்கும் போதெல்லாம், உலகளாவிய வேலைக்கு நன்கொடை கேட்க வேண்டுமா?

இல்லை. டிசம்பர் 1999 நம் ராஜ்ய ஊழியத்தில் “பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்” என்ற கட்டுரை இவ்வாறாக குறிப்பிட்டது: “சில சமயங்களில், இந்த உலகளாவிய வேலைக்கு நன்கொடை என்ற விஷயத்தைப் பற்றி பேசுவது கொஞ்சம் சங்கடமாக தோணலாம்.” இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நன்கு யோசித்து தீர்மானிப்பது அவசியம். நம்முடைய வேலை பத்திரிகைகளை விற்பது அல்ல, ஆனால் அது முற்றிலும் பைபிள் கல்வி புகட்டும் வேலையே என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென நாம் விரும்புகிறோம். இந்த வேலைக்காக நாம் நிதி திரட்டுவதில்லை என்பதையும் அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.

நம்முடைய வேலை மனமுவந்த நன்கொடைகள் மூலம் எப்படி ஆதரிக்கப்படுகிறது என்பதை பத்திரிகை அளிக்கும்போதே ஆர்வமுள்ளோருக்கு தெளிவாக விளக்குவது நல்லது. ஆர்வமுள்ளவர்களுக்கு அல்லது வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே பத்திரிகைகளை அளிப்பதற்கு நாம் கவனமாக இருந்தால், பத்திரிகையை பெற்றுக்கொள்கிறவரே பொதுவாக நன்கொடை அளிக்க முன்வருவார்.

அக்கறைக்காட்டும் அத்தகையோரில் அநேகர் அடுத்தடுத்த சந்திப்புகளில் தாங்களாகவே நன்கொடைகளை கொடுக்க முன் வருகின்றனர். சிலர் பிரசுரங்களின் விலையை கேட்கலாம். அப்பொழுது, நம்முடைய வேலை வியாபார நோக்கத்துடன் செய்யப்படுவதில்லை என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டு, ஆர்வமுள்ளோருக்கு பிரசுரங்களை விலையின்றி அளிக்கிறோம் என்பதை விளக்கலாம். உலகளாவிய வேலையை ஆதரிக்க விருப்பமுள்ளவர்கள் சிறிய நன்கொடை தந்து உதவலாம் என்பதையும் அப்போது அவர்களுக்கு தெரியப்படுத்தலாம். நாம் மறுசந்திப்பு செய்யும் நபர் உலகளாவிய வேலையை ஆதரிக்க நன்கொடை தரவில்லையென்றால், அவ்வப்போது அதைப் பற்றி நாம் அவரிடம் பேசலாம்​—⁠பொருத்தமான சமயத்தில்.

ஆர்வம் காட்டுவோருக்கு விலையின்றி பிரசுரங்களை நாம் கொடுத்தாலும், அவற்றை தயாரித்து, வெளியிடுவதில் உட்பட்டுள்ள செலவுகளை நம் மனதில் வைக்க வேண்டும். உலகளாவிய வேலையில் உட்பட்டுள்ள எல்லா செலவுகளையும் சமாளிப்பதற்கு நன்கொடைகளை அளிக்க கடவுளுடைய ஆவி அவருடைய ஊழியர்களையும் ஆர்வம் காட்டுபவர்களையும் தூண்டுமென்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

◼ சொந்த உபயோகத்திற்காக காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் பிரதிகளை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்?

எல்லா மொழிகளிலும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தா செய்வது நிறுத்தப்பட்டதால், பிரஸ்தாபிகள் அனைவரும் உள்ளூர் சபை மூலமாகவே தங்கள் பத்திரிகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பிரெயில் பதிப்புகளுக்கு இப்படி செய்ய வேண்டியதில்லை. தகுதியுள்ளவர்களுக்கு தபால் செலவில்லாமல் அவை இலவசமாக அனுப்பப்படுகின்றன. காங்கிரிகேஷன் ரிக்வெஸ்ட்ஸ் ஃபார்ம் (M-202) பயன்படுத்தி பிற மொழி பதிப்புகளுக்காகவும் பெரிய எழுத்து பதிப்புகளுக்காகவும் சபைகள் ஆர்டர் செய்யலாம் என்பதை தயவுசெய்து கவனத்தில் வைக்கவும்.

உங்கள் பிராந்தியத்திலுள்ள ஒரு நபர் தனக்கு தொடர்ந்து பத்திரிகை வேண்டுமென்று கேட்டால், பத்திரிகைகளின் புதிய இதழ்கள் கையில் கிடைத்த உடனேயே தயவுசெய்து அவற்றை கொண்டுபோய் கொடுத்துவிடுங்கள். இதன் மூலம் ஒரு பிரதியையும் தவறவிடாமல் பார்த்துக் கொள்ளலாம். சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய தனிப்பட்ட தேவைக்காக பத்திரிகைகள் அல்லது பிரசுரங்களை ராஜ்ய மன்றங்களிலுள்ள பத்திரிகை இலாக்காவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பிரஸ்தாபிகள் தங்களுடைய தனிப்பட்ட பத்திரிகை மார்க்கத்தில் சபை நீக்கம் செய்யப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது.

பத்திரிகை மார்க்கத்தின் மூலம் பிரஸ்தாபிகளால் சந்திக்க முடியாத நபர்களுடைய சந்தாக்களை மட்டுமே இந்திய கிளை அலுவலகம் நிர்வகிக்கும். எவ்விதத்திலுமே பத்திரிகைகளை பெற முடியாதவர்களுக்காக சபை ஊழியக் குழு சந்தாக்களை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு செய்யும்போது, அந்த சந்தா சபை ஊழியக் குழுவால் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்டது என்பதை விளக்கும் சிறு குறிப்பை சபை செயலர் சேர்த்து அனுப்ப வேண்டும்.

பிரஸ்தாபிகள் தங்கள் சொந்த சந்தாக்களுக்காக கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதக் கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. பிரஸ்தாபிகள் அல்லது ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கும் சந்தாக்கள் சபைக்கு திரும்ப அனுப்பப்படும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்