உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/08 பக். 6
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
  • இதே தகவல்
  • தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • முதியோரைக் கவனித்தல்—வளர்ந்துவரும் ஒரு பிரச்னை
    விழித்தெழு!—1992
  • விசுவாசத்திற்கு சவாலாயிருக்கும் ஒரு மருத்துவ நிலையை எதிர்பட நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • நர்ஸின் முக்கிய சேவை
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 4/08 பக். 6

கேள்விப் பெட்டி

◼ மத அமைப்பு நடத்தும் மருத்துவமனையில் அல்லது நர்சிங் ஹோமில் சிகிச்சையையோ பராமரிப்பையோ ஒரு யெகோவாவின் சாட்சி பெற்றுக்கொள்வது சரியா?

பல்வேறு மத அமைப்புகள் மருத்துவமனைகளையும் நர்சிங் ஹோம்களையும் நடத்துகின்றன. இவற்றில், மருத்துவ சிகிச்சையோ நாள்பட்ட வியாதிகளுக்குப் பராமரிப்போ அளிக்கப்படுகின்றன. இவை, பொதுவாக மகா பாபிலோனின் முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தப்படவில்லை. (வெளி. 18:2, 4) பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இவற்றை ஒரு மத அமைப்பு நடத்த ஆரம்பித்திருக்கலாம். இன்று, சில மருத்துவமனைகளின் பெயரைப் பார்த்ததும் அவை குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையவையாய் தோன்றலாம்; மற்றபடி அவற்றுக்கும் மதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதில்லை. மறுபட்சத்தில் சில மருத்துவமனைகளில் மத குருமார்களே பல வேலைகளைக் கவனித்து வருகிறார்கள்.

ஒரு யெகோவாவின் சாட்சி சிகிச்சை பெற மருத்துவமனைக்கோ பராமரிப்பைப் பெற நர்சிங் ஹோமுக்கோ செல்ல வேண்டியிருந்தால் என்ன செய்வது? இவற்றை ஒரு மத அமைப்பு நடத்துகிறதென்றால் அங்கு சிகிச்சையையோ பராமரிப்பையோ பெறுவதா வேண்டாமா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். அப்படிப் பெறுவதற்கு ஒருவருடைய மனசாட்சி இடங்கொடுத்தாலும் மற்றவருடைய மனசாட்சி மறுக்கலாம். (1 தீ. 1:5) சில சூழ்நிலைகள் காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தீர்மானத்தை எடுக்கலாம்; அவற்றைச் சிந்திப்பது நமக்கு நல்லது.

உதாரணத்திற்கு, அந்தச் சுற்றுவட்டாரத்திலேயே மத அமைப்பின் பெயரில் நடத்தப்படும் அந்த ஒரேவொரு மருத்துவமனையோ நர்சிங் ஹோமோ மட்டுமே இருக்கலாம். அல்லது ஒருவேளை மற்றொன்று இருந்தாலும் இதுவே சிறந்த பராமரிப்பை அளிக்கும் மருத்துவமனை அல்லது நர்சிங் ஹோம் என்று பெயரெடுத்திருக்கலாம். மத அமைப்பின் பெயரில் செயல்படும் இந்த மருத்துவமனையில் மட்டுமே குறிப்பிட்ட சிகிச்சைக்குரிய விசேஷ சாதனங்கள் இருக்கலாம்; அல்லது, இந்த மருத்துவமனையில் மட்டுமே உங்கள் மருத்துவரோ அறுவை சிகிச்சை மருத்துவரோ வேலை செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கலாம். மேலும், சிலசமயங்களில் மத அமைப்பால் நடத்தப்படும் மருத்துவமனைகள், ஒரு கிறிஸ்தவராக இரத்தத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமான உங்களுடைய கருத்துகளுக்கு மரியாதை கொடுக்கலாம். ஆனால், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இந்த விஷயத்தில் உங்களுடன் ஒத்துழைக்காதிருக்கலாம். எனவே, இவையெல்லாம் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு நீங்கள் சிந்திக்க வேண்டிய சில அம்சங்களாகும்.

மத அமைப்பு நடத்தும் மருத்துவமனையையோ நர்சிங் ஹோமையோ பயன்படுத்திக்கொள்ள நீங்கள் தீர்மானித்தால், அதன் சேவைகளுக்குக் கட்டணத்தை மட்டுமே செலுத்துவதாக நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஒரு மத அமைப்பு அதைத் தொழிலாகச் செய்துவருகிறது என்றும், அதன் சேவையைப் பயன்படுத்திக்கொண்டு கட்டணம் செலுத்துவது, அந்தப் பொய் மதத்தை ஆதரிப்பதற்கு நேரடியாகவும், மனமுவந்தும் நன்கொடை அளிப்பதாக இருக்காது என்றும் நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். அது தயாரிக்கும் பொருளுக்கு அல்லது அதன் சேவைக்கு மட்டுமே நீங்கள் கட்டணம் செலுத்துகிறீர்கள்.

இருப்பினும், இத்தகைய சூழ்நிலைகளில் ஒரு கிறிஸ்தவராக பொய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட எந்தக் காரியங்களிலும் நீங்கள் ஈடுபடாதிருப்பதை உண்மையில் உறுதிசெய்துகொள்ள வேண்டும். அதோடு, அங்கு வேலை செய்கிற அல்லது அங்கு வருகிற நபர்களை “பாதர்,” “சிஸ்டர்” போன்ற பொதுவான மத பட்டப்பெயர்களில் அழைக்காதிருக்கவும் வேண்டும். (மத். 23:9) அதன் சிகிச்சையையும் சேவையையும் மட்டும் நீங்கள் பெறுவதால் முழுக்க முழுக்க அது தொழில் சம்பந்தப்பட்டதாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதையும் சபை மூப்பர்கள் உங்களைச் சந்திக்க வருவார்கள் என்பதையும் தெரிவிக்கலாம். இது, நீங்கள் அங்கே தங்கியிருக்கும் சமயத்தில் மூப்பர்களின் உதவியைக் கண்டிப்பாகப் பெறுவதை உறுதிப்படுத்தும்.​—⁠1 தெ. 5:14.

முக்கியமாக, மத அமைப்புகள் நடத்தும் முதியோர்களுக்கான நர்சிங் ஹோம்களில் தங்கியிருக்கிற வயதான சகோதர சகோதரிகளின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சத்தியத்திலுள்ள அவர்களுடைய குடும்பத்தாரும், சபை மூப்பர்களும், சபையிலுள்ள மற்றவர்களும் பொறுப்போடு செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஊக்கத்தோடு செயல்படுவது வயதான அந்தக் கிறிஸ்தவர்களின் மனதிற்கு மிகுந்த தெம்பை அளிக்கும்; அதோடு, அப்படிப்பட்ட நர்சிங் ஹோம்களில் நடைபெறுகிற மத ஆராதனைகளிலும், கொண்டாட்டங்களிலும், அத்தகைய வேறு காரியங்களிலும் தவறிப் போய் அவர்கள் கலந்துகொள்ளாதிருக்கவும் உதவும்.

ஒவ்வொருவரும் இந்தக் குறிப்புகளை எல்லாம் மனதில் வைத்து, சம்பந்தப்பட்ட எல்லா சூழ்நிலைகளையும் சிந்தித்து, எந்த மருத்துவமனையில் சிகிச்சையையோ நர்சிங் ஹோமில் பராமரிப்பையோ பெற வேண்டுமென தாங்களாகவே தீர்மானம் எடுக்க வேண்டும்.​—⁠கலா. 6:⁠5.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்