பைபிள் ஒரு கண்ணோட்டம் சிற்றேட்டை அளிக்க ஒரு வழி...
நம் பிராந்தியத்தில் உள்ள அநேகருக்கு, முக்கியமாக கிறிஸ்தவமண்டல பின்னணியைச் சேராதவர்களுக்கு, பைபிளைப் பற்றி அதிகம் தெரியாது. எனவே, அப்படிப்பட்டவர்களோடு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை படிக்கையில் சில பிரஸ்தாபிகள் பைபிள் ஒரு கண்ணோட்டம் சிற்றேட்டையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏனென்றால், பைபிளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்தச் சிற்றேடு உதவுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் 3-ஆம் அதிகாரத்தைச் சிந்திப்பதற்கு முன் இந்தச் சிற்றேட்டின் பகுதி 1-ஐ வீட்டுக்காரருடன் சிந்திக்கிறார். அதுமுதல் ஒவ்வொரு முறை படிப்பு நடத்திய பின்பு இந்தச் சிற்றேட்டிலிருந்து ஒரு பகுதியைச் சிந்திக்கிறார். பைபிளைப் பற்றி ஓரளவே அறிந்த அல்லது ஒன்றுமே அறியாத நபருடன் நீங்கள் பைபிள் படிக்கிறீர்களா? பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தோடு சேர்த்து பைபிள் ஒரு கண்ணோட்டம் என்ற சிற்றேட்டையும் அவரோடு படித்தீர்கள் என்றால் ‘பரிசுத்த எழுத்துக்களை’ அவரால் கற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் அவை, “ஞானத்தைத் தந்து . . . மீட்புக்கு வழிநடத்துபவையாக இருக்கின்றன.”—2 தீ. 3:15.