ராஜ்ய செய்தி எண் 38 டிசம்பர் மாத வினியோகிப்பு
1. மரணத்தைப் பற்றி மக்கள் என்ன கேள்விகள் கேட்கிறார்கள், அவர்களுடைய கேள்விகளுக்கு டிசம்பர் மாதத்தில் எவ்வாறு பதிலளிப்போம்?
1 மரணத்தைப் பற்றி மக்களுக்கு வெவ்வேறுபட்ட நம்பிக்கைகள் இருந்தாலும், எல்லோருக்கும் மரணம் ஓர் எதிரிதான். (1 கொ. 15:26) மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களை மீண்டும் பார்க்க முடியுமா போன்ற கேள்விகள் அநேகருடைய மனதைக் குடைகின்றன. எனவே, “இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?” என்ற ராஜ்ய செய்தி எண் 38-ஐ வினியோகிப்பதில் உலகெங்குமுள்ள எல்லா சபைகளும் பங்குபெறும். இந்த விசேஷ வினியோகிப்பு டிசம்பர் 1-லிருந்து ஆரம்பிக்கும். வினியோகிப்பிற்குப் பிறகு ராஜ்ய செய்தி எண் 38-ஐ மற்ற துண்டுப்பிரதிகளைப் போல் பயன்படுத்துவோம்.
2. ராஜ்ய செய்தி எண் 38 எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது?
2 எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது? ராஜ்ய செய்தி எண் 38-ஐ நீளவடிவில் மடிக்க வேண்டும். அப்போதுதான் ஆர்வமூட்டும் தலைப்பையும், “நீங்கள் என்ன சொல்வீர்கள் . . . வருவார்கள்? வரமாட்டார்கள்? வரலாம்?” என்ற கேள்வியையும் முன்பக்கத்தில் பார்க்க முடியும். அடுத்தப் பக்கத்தைத் திறக்கும்போது தலைப்பு கேள்விக்கு பைபிள் தரும் பதிலையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பைபிளை நம்புவதற்கான காரணங்களையும் தெரிந்துகொள்ள முடியும். பின்பக்கத்தில், சிந்தித்துப் பார்க்க ஓர் ஆர்வமூட்டும் கேள்வியும் கூடுதலான விஷயங்களை எப்படித் தெரிந்துகொள்வது என்ற விவரங்களும் இருக்கும்.
3. ராஜ்ய செய்தி எண் 38 எப்படி வினியோகிக்கப்படும்?
3 எப்படி வினியோகிக்கப்படும்? நினைவுநாள் மற்றும் மாநாட்டு அழைப்பிதழ்களை வினியோகிப்பதைப் போலவே இதையும் வினியோகிப்போம். ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட மூப்பர்களுக்கான கடிதத்தைக் கருத்தில் கொண்டு பிராந்தியத்தை எப்படி முழுமையாக முடிப்பதென்று மூப்பர்கள் சொல்வார்கள். சிறிய பிராந்தியமுள்ள சபைகள், அருகில் இருக்கும் பெரிய பிராந்திய சபைகளுக்கு உதவ முன்வரலாம். அந்தந்த வாரத்திற்குத் தேவையான பிரதிகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். பிராந்தியத்திலுள்ள எல்லா வீடுகளிலும் கொடுத்துவிட்டால் பொது ஊழியத்தில் இதைக் கொடுக்கலாம். சபையிலிருக்கும் எல்லா பிரதிகளையும் சீக்கிரமே வினியோகித்துவிட்டால், அந்த மாதத்திற்கான பிரசுர அளிப்பை ஊழியத்தில் கொடுக்க வேண்டும். மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்குப் பதிலாக இந்த விசேஷ வினியோகிப்பில் பங்குகொள்வோம். வார இறுதி நாட்களில் பத்திரிகைகளையும் சேர்த்துக் கொடுக்கலாம். இந்த விசேஷ விநியோகிப்பில் முழுமையாகக் கலந்துகொள்ள நீங்கள் திட்டமிடுவீர்களா?