மார்ச் 22-லிருந்து நினைவுநாள் அழைப்பிதழை விநியோகிப்போம்
இந்த ஆண்டு நினைவுநாள் அழைப்பிதழை மார்ச் 22, சனிக்கிழமையிலிருந்து கொடுக்கத் தொடங்குவோம். நாம் எல்லோரும் முழுமூச்சோடு பங்குகொள்வோம். தேவைப்பட்டால் சனி, ஞாயிறுகளில் அழைப்பிதழுடன் அந்த மாத பத்திரிகைகளையும் கொடுக்கலாம். ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமையில், பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்குப் பதிலாக அழைப்பிதழ் கொடுப்பதற்கே அதிக கவனம் செலுத்துவோம். யாராவது அதிக ஆர்வம் காட்டினால் பைபிள் படிப்பு ஆரம்பிக்க முயற்சி செய்யலாம். உங்கள் பிராந்தியத்தில் நிறைய பேருக்கு அழைப்பிதழைக் கொடுக்க பொது ஊழியம் உதவுமா என்பதை ஊழியக் கண்காணி தீர்மானிப்பார். உறவினர்கள், சக பணியாளர்கள், சக மாணவர்கள், மறுசந்திப்புகள், உங்களுக்குப் பழக்கமானவர்கள் என யாரையும் விட்டுவிடாதிருக்க இப்போதே பட்டியல் போடுங்கள். பிறகு, மறக்காமல் அழைப்பிதழைக் கொடுங்கள். யெகோவாவும் இயேசுவும் காட்டிய ஒப்பற்ற அன்பை நினைத்துப்பார்க்கும் அந்நாளில் அநேகர் நம்முடன் கூடிவருவார்கள் என்று நம்புகிறோம்.—யோவா. 3:16; 15:13.