உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/15 பக். 2
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
  • இதே தகவல்
  • இன்டர்நெட்—ஜாக்கிரதை!
    நம் ராஜ்ய ஊழியம்—1999
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • இன்டர்நெட்—ஏன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?
    விழித்தெழு!—1997
  • இன்டர்நெட்—சேவைகளும் தகவல்மூலங்களும்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 7/15 பக். 2

கேள்விப் பெட்டி

◼ வேறு நாடுகளில் இருக்கும் முன்பின் தெரியாதவர்களிடம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி பைபிளைப் பற்றி பேசலாமா? அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தலாமா?

நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இருப்பவர்களுக்கும், யெகோவாவின் சாட்சிகள் அதிகமாக இல்லாத நாடுகளில் இருப்பவர்களுக்கும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி சிலர் பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். இதனால் நல்ல பலன்கள் கிடைத்திருக்கிறது. அதேசமயத்தில், முகம் தெரியாத நபர்களுக்கு ஈ-மெயில் அனுப்பும்போதும், சாட் செய்யும்போதும் நிறைய ஆபத்துகள் வருகிறது. (ஜூலை 2007 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 3-ஜ பாருங்கள்) நாம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக் கொடுக்கத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால், யாரென்று தெரியாத நபர்களுடன் நாம் பேசும்போதும், பழகும்போதும் நிறைய ஆபத்துகள் வரலாம். ஒருவேளை அவர்கள் விசுவாச துரோகிகளாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. (1 கொ. 1:19-25; கொலோ. 2:8) அதோடு நம்முடைய வேலை தடை செய்ப்பட்டுள்ள நாடுகளில் இருக்கும் அதிகாரிகள் ஈ-மெயில், கடிதங்களை ரொம்ப கவனமாக கண்காணிக்கிறார்கள். அதனால், அந்த நாடுகளுக்கு நாம் அனுப்பும் தகவல்கள் அங்கு இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு பிரச்சினைகளை கொண்டுவரலாம். ஆகவே, நாம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி மற்ற நாடுகளில் இருப்பவர்களுக்கு ஆன்லைனில் பைபிளை பற்றி பேசக்கூடாது.

மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் யாரிடமாவது நீங்கள் பைபிளைப் பற்றி பேசியிருந்தால் என்ன செய்வது? அப்போது நம்முடைய அமைப்பு சொன்னால் மட்டும்தான் அவர் சொந்த நாட்டிற்கு போனபின்பு தொடர்ந்து அவரிடம் பைபிளை பற்றி பேச வேண்டும். இல்லையென்றால், அவருக்கு jw.org வெப்சைட்டை பயன்படுத்தி இன்னும் நிறைய விஷயங்களை எப்படி தெரிந்து கொள்வது, அவருடைய நாட்டில் இருக்கும் நம் அமைப்பை எப்படி தொடர்பு கொள்வது என்பதை எல்லாம் சொல்லிக் கொடுக்கலாம். அவர் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ராஜ்ய மன்றம் இருந்தால் அதைப் போய் பார்க்க சொல்லலாம். ஒருவேளை, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தன்னை சந்திக்க வேண்டும் என்று அந்த நபர் விரும்பினால், தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43) என்ற படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் சபையின் செயலரிடம் கொடுங்கள். அவர் அதை jw.org மூலம் நம்முடைய அமைப்பிற்கு அனுப்புவார். ஆர்வம் காட்டியவருடைய நாட்டில், நம் வேலைக்கு ஏதாவது தடை இருக்கிறதா என்பது அந்த நாட்டில் இருக்கும் கிளை அலுவலகத்திற்குத்தான் நன்றாக தெரியும். நம் வேலைக்கு எந்த பிரச்சினையும் வராமல் ஆர்வம் காட்டிய நபருக்கு பைபிளை கற்றுக்கொடுக்க அமைப்பே உதவுவார்கள்.—நவம்பர் 2011 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 2-ஜ பாருங்கள்.

நம்முடன் பைபிளை படிப்பவர் வேறு நாட்டிற்கு போனால் அல்லது வேறு நாட்டில் இருப்பவருக்கு இன்டர்நெட் மூலம் நாம் பைபிள் படிப்பு நடத்திக் கொண்டிருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின்படி செய்யுங்கள். உங்களுடன் பைபிளைப் படித்தவர் வேறு நாட்டிற்கு போன பின்பு யெகோவாவின் சாட்சி ஒருவர் அவரை சந்திக்கும் வரைக்கும் நீங்கள் அவருக்கு பைபிள் படிப்பு நடத்தலாம். ஒருவேளை, அந்த நபர் நம் வேலை தடை செய்யப்பட்டுள்ள நாட்டில் இருந்தால் கடிதம் மூலமாகவோ ஃபோன் மூலமாகவோ அல்லது இன்டர்நெட் மூலமாகவோ பைபிளைப் பற்றி அவரிடம் பேசும்போது நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.—மத் 10:16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்