பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 44–48
‘உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடுவதை’ நிறுத்து
ராஜாவின் வீட்டில் பாருக் கல்வியறிவுள்ள ஒரு அதிகாரியாக இருந்திருக்கலாம். அவர் யெகோவாவை வணங்கினார். எரேமியாவின் நம்பகமான உதவியாளராகவும் இருந்தார். ஆனால், ஒரு சமயத்தில் அவர் தவறாக யோசிக்க ஆரம்பித்தார். தனக்கு ‘பெரிய காரியங்களைத் தேடினார்.’ ஒருவேளை அரசவையில் பிரபலமான நபராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். அல்லது, அவருக்குப் பொருளாசை இருந்திருக்கலாம். எருசலேமுக்கு வரவிருந்த அழிவில் காப்பாற்றப்படுவதற்கு அவருடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.