கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உங்களையே நீங்கள் மன்னிக்கிறீர்களா?
நாம் செய்த தவறுகளுக்காக யெகோவா நம்மை மன்னித்தாலும் நம்மையே நாம் மன்னிப்பது கஷ்டமாக இருக்கலாம். 2016 “யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்!” என்ற மண்டல மாநாட்டில் இதைப் பற்றி ஒரு பேச்சும் ஒரு வீடியோவும் இருந்தது. JW லைப்ரரி அப்ளிகேஷனிலிருந்து இந்த வீடியோவை மறுபடியும் பார்த்த பிறகு, கீழே இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
சோனியா எத்தனை வருஷம் சபை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்?
மூப்பர்கள் சோனியாவுக்கு எந்த வசனத்தைக் காட்டினார்கள்? என்ன செய்ய இது சோனியாவைத் தூண்டியது?
சோனியா மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது சபையில் இருந்தவர்கள் அவளிடம் எப்படி நடந்துகொண்டார்கள்?
எப்படிப்பட்ட எண்ணம் சோனியாவை வாட்டி எடுத்தது, அதைச் சமாளிக்க அவளுடைய அப்பா எப்படி உதவி செய்தார்?