உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g04 2/8 பக். 12-27
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • (இந்த வினாடி வினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 27-⁠ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1997
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—2000
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—2004
g04 2/8 பக். 12-27

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடி வினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 27-⁠ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. எவை என்றும் ஒழிவதில்லை என யெகோவா தீர்மானித்தார்? (ஆதியாகமம் 8:22)

2. “நியாயத்தையும் தேவ அன்பையும்” விட்டுவிட்டு எந்த மூலிகைகளை தசம பாகமாக தரும்படி கேட்பதில் பரிசேயர்கள் வெகு கவனமாக இருந்தார்கள் என இயேசு சொன்னார்? (லூக்கா 11:42)

3. இயேசு எந்த விதத்தில் திரும்பி வரப் போவதாக சொன்னார்? (வெளிப்படுத்துதல் 16:15)

4. ‘கழுதையின் பச்சைத் தாடையெலும்பால்’ எத்தனை பெலிஸ்தரை சிம்சோன் கொன்று போட்டார்? (நியாயாதிபதிகள் 15:15)

5. யெகோவாவால் நேரடியாக படைக்கப்பட்ட ஒரே சிருஷ்டியாக இயேசு இருப்பதால் அவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? (யோவான் 3:18)

6. சோம்பேறிகளைக் குறித்து தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் என்ன கட்டளைகளைக் கொடுத்தார்? (2 தெசலோனிக்கேயர் 3:10, 12)

7. ‘இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிப்பதற்கு’ எல்லாரும் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார்? (லூக்கா 13:24)

8. எந்தப் பட்டணம் இஸ்ரவேலரின் வட எல்லையைக் குறித்துக் காட்டியது? (1 சாமுவேல் 3:20)

9. கொலை வெறிபிடித்த ஏரோது ராஜாவிடம் திரும்பிப் போகாதிருக்கும்படி இயேசுவைக் காண வந்த வானசாஸ்திரிகளை கடவுள் எப்படி எச்சரித்தார்? (மத்தேயு 2:12)

10. பைபிளில் இயேசுவின் பெயருக்கு முன்பாகவோ பின்பாகவோ எந்த அடைமொழிகளும் சேர்க்கப்படாததால் எப்படிப்பட்ட சொற்றொடர்களை அவருடைய பெயருடன் நாம் அதில் காண்பதில்லை?

11. சபைக் கண்காணி ‘புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவராக இருப்பது’ ஏன் அவசியம்? (1 தீமோத்தேயு 3:7)

12. எத்தியோப்பிய மந்திரியை பிலிப்பு எங்கே கண்டுபிடித்து, அவருக்குப் போதித்தார்? (அப்போஸ்தலர் 8:26)

13. அமலேக்கியரை அவர்களுடைய ஆடு மாடுகளுடன் சேர்த்து முற்றிலும் அழிக்கும்படியான யெகோவாவின் கட்டளைக்கு சவுல் கீழ்ப்படியாததால் அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது? (1 சாமுவேல் 15:23, 26)

14. ஆபிரகாம் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை அந்நியனாகவும் பரதேசியாகவும் ஏன் கழித்தார்? (எபிரெயர் 11:10, NW; 12:22)

15. இயேசுவுக்குப் பதிலாக பிலாத்து விடுதலை செய்த பரபாஸ் என்ன குற்றச்செயல்களை செய்திருந்தான்? (லூக்கா 23:25; யோவான் 18:40)

16. லித்தா ஊரை சேர்ந்தவனும், ‘எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்து’ பேதுருவால் குணப்படுத்தப்பட்டவனுமான அந்த மனுஷனுடைய பெயர் என்ன? (அப்போஸ்தலர் 9:32-34) (g03 12/08)

வினாடி வினாவுக்கான விடைகள்

1. “விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும்”

2. ஒற்தலாம், மருக்கொழுந்து

3. “திருடனைப்போல்”

4. 1,000

5. ‘தேவனுடைய ஒரேபேறான குமாரன்’

6. ‘ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.’ ‘இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலை செய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும்’

7. “பிரயாசப்படுங்கள்”

8. தாண்

9. சொப்பனத்தில்

10. “கர்த்தராகிய கிறிஸ்து இயேசு” மற்றும் “ராஜாவாகிய கிறிஸ்து இயேசு”

11. அப்போதுதான் ‘அவர் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதிருப்பார்’

12. எருசலேமிலிருந்து காசாவுக்கு செல்லும் வனாந்தர பாதையில்

13. யெகோவா அவரை “இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடி” புறக்கணித்தார்

14. ‘மெய்யான அஸ்திபாரங்களுள்ள நகரமாகிய’ பரம எருசலேமுக்கு அவர் காத்திருந்தார்

15. கலகம், கொலை, திருட்டு

16. ஐனேயா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்