பள்ளியில் சாட்சி கொடுக்கத் தயாரா?
1. பள்ளியில் என்ன வாய்ப்புகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன?
1 நீங்கள் பள்ளியில் இப்போதுதான் சேர்ந்திருக்கலாம், அல்லது சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருக்கலாம்; எப்படியிருந்தாலும் சிறுவர்களாகிய நீங்கள் புதிய சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்ப்படுவீர்கள். அதே சமயத்தில், ‘சத்தியத்திற்குச் சாட்சி கொடுக்க’ உங்களுக்குப் புதிய வாய்ப்புகளும் உள்ளன. (யோவா. 18:37) நீங்கள் நன்கு தயாரித்து, சாட்சி கொடுக்கத் தயாராய் இருக்கிறீர்களா?
2. பள்ளியில் சாட்சி கொடுக்க நீங்கள் எவ்விதங்களில் தயாராக இருக்கிறீர்கள்?
2 வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றி பெற பல விதங்களில் நீங்கள் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள்; அதை, யெகோவாவிடமிருந்தும் உங்கள் பெற்றோரிடமிருந்தும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமையிடமிருந்தும் பெற்றிருக்கிறீர்கள். (நீதி. 1:8; 6:20; 23:23-25; எபே. 6:1-4; 2 தீ. 3:16, 17) இப்போது பள்ளியில் உங்களுக்கு என்னென்ன சவால்கள் வரலாம் என்பதை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பைபிளிலிருந்து நீங்கள் பயிற்சி பெற்றிருப்பதும் எதிர்ப்படவிருக்கும் சவால்களைப் பற்றி அறிந்திருப்பதும் சாட்சி கொடுக்க உங்களைத் தயார்படுத்துகிறது. (நீதி. 22:3) இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்திலும் இளைஞருக்கென விழித்தெழு! பத்திரிகையில் தவறாமல் வெளிவருகிற கட்டுரைகளிலும் உள்ள அறிவுரைகளுக்கும் பைபிள் சார்ந்த ஆலோசனைகளுக்கும் அதிக கவனம் செலுத்துங்கள்.
3. நீங்கள் சாட்சி கொடுக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
3 உங்களுக்கே உரிய பிராந்தியமான பள்ளியில் சாட்சி கொடுக்க அநேக வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய கண்ணியமான தோற்றம், நடத்தை, பேச்சு, ஆசிரியர்களிடமும் சக மாணவர்களிடமும் மரியாதையோடு நடந்துகொள்வது, நல்ல மதிப்பெண் வாங்குவது இவற்றையெல்லாம் மற்றவர்கள் கவனிக்கலாம்; நல்ல லட்சியத்தோடு வாழ்வதை அவர்கள் புரிந்துகொள்ளலாம்; அப்போது சிலர், ‘நீ ஏன் வித்தியாசமாய் இருக்கிறாய்?’ என்று கேட்கலாம். (மல். 3:18; யோவா. 15:19; 1 தீ. 2:9, 10) அப்போது, சாட்சி கொடுப்பதற்கும் உங்கள் மத நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். தேசிய விழாக்கள், விடுமுறை கொண்டாட்டங்கள் போன்றவற்றால் வருடம் முழுவதும் நீங்கள் சவால்களை எதிர்ப்படலாம். அவற்றில் ஏன் கலந்துகொள்வதில்லை என யாராவது கேட்டால், “அது என் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது; நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என்று மட்டுமே பதிலளிப்பீர்களா? அல்லது அன்பான தகப்பனான யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்துவீர்களா? யெகோவாவின் உதவியோடு நன்கு தயாரிக்கும்போது, ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிறந்த சாட்சிகொடுக்கத் தயாராய் இருப்பீர்கள்.—1 பே. 3:15.
4. பள்ளியில் படிக்கும் காலத்தில் வெற்றிகரமாய்ச் சாட்சி கொடுக்க முடியுமென நீங்கள் ஏன் உறுதியாய் நம்புகிறீர்கள்?
4 பள்ளிக்குப் போவதை நினைத்து உங்கள் மனம் சற்றுப் படபடக்கலாம்; ஆனால், படிக்கும் காலத்தில் அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்க அநேகர் உங்களுக்கு உதவுவார்கள் என்பதை மனதில் வையுங்கள். மேலும், உங்களுக்கே உரிய பிராந்தியத்தில் சாட்சி கொடுக்க வாய்ப்பிருப்பதைக் குறித்து உங்களுடன் சேர்ந்து நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். எனவே, பள்ளியில் சிறந்த சாட்சி கொடுக்கத் தைரியமாகவும் தயாராகவும் இருப்பீர்களாக!