கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் கொடுக்க முடியுமா?
ஏசாயா முன்னறிவித்தபடி, யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வளர்ச்சியை நாம் பார்க்கிறோம். (ஏசா 54:2) அதனால், புதிய ராஜ்ய மன்றங்களும் மாநாட்டு மன்றங்களும் கிளை அலுவலகங்களும் நமக்குத் தேவைப்படுகின்றன. அந்தக் கட்டிடங்களைக் கட்டிய பிறகு அவற்றைப் பராமரிக்கவும், சில சமயங்களில் புதுப்பிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்த வேலைகளுக்கு ஆதரவு தருவதன் மூலம் யெகோவாவுக்கு நம்முடைய நேரத்தையும் சக்தியையும் கொடுக்கலாம். எப்படி?
ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யும் நியமிப்பு நம்முடைய ஊழியத் தொகுதிக்குக் கிடைக்கும்போது நாம் அதில் கலந்துகொள்ளலாம்
ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பதற்கான பயிற்சியைப் பெற்றுக்கொள்ள நாம் முன்வரலாம்
நாம் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் நடக்கும் கட்டுமான மற்றும் பராமரிப்பு வேலைகளில் அவ்வப்போது உதவுவதற்கு உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்களுக்கான விண்ணப்பத்தை (DC-50) பூர்த்திசெய்து கொடுக்கலாம்
நம் நாட்டில் இருக்கும் பெத்தேலிலோ கிளை அலுவலகத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற இடங்களிலோ ஒரு வாரத்துக்கு அல்லது சில மாதங்களுக்கு சேவை செய்ய வாலண்டியர் சேவைக்கான விண்ணப்பத்தை (A-19) பூர்த்திசெய்து கொடுக்கலாம்
ஒரு புதிய கட்டுமான வேலைக்கான திட்டம்—சில காட்சிகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
2014-லிருந்து நாம் எந்தளவுக்கு அதிகமாக வீடியோக்களைப் பயன்படுத்துகிறோம்?
அதிகமான வீடியோக்களைத் தயாரிப்பதற்காக என்ன கட்டுமான வேலைக்குத் திட்டம் போடப்பட்டுள்ளது? அதற்கு எவ்வளவு காலம் திட்டமிடப்பட்டுள்ளது?
வாலண்டியர்கள் இதற்கு எப்படி உதவலாம்?
அமெரிக்கக் கிளை அலுவலக மேற்பார்வையின் கீழுள்ள பகுதியில் இருப்பவர்கள், ராமபோ கட்டுமான வேலைக்கு உதவ விரும்பினால், ஒரு விண்ணப்பத்தை (DC-50) பூர்த்திசெய்து கொடுத்து பக்கத்தில் நடக்கும் உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வேலைகளில் பங்குகொள்வது ஏன் முக்கியம்?
யெகோவா இந்த வேலையை வழிநடத்துகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருந்திருக்கிறது?
இந்தக் கட்டுமான வேலையில் நம்மால் பங்குகொள்ள முடியவில்லை என்றாலும் வேறு எந்த விதத்தில் நாம் ஆதரவு கொடுக்கலாம்?