தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 29, 2013-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்காகத் தயாரிக்கும்போது ஆராய்ச்சி செய்ய அது உதவும்.
1. மாற்கு 10:6-9-ல், திருமணத்தைப் பற்றிய என்ன முக்கியமான நினைப்பூட்டுதலை இயேசு அளித்தார்? [மார்ச் 4, காவற்கோபுரம் 08 2/15 பக். 30 பாரா 8]
2. யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவிப்பது என்பதன் அர்த்தமென்ன? (மாற்கு 12:30, BSI) [மார்ச் 4, காவற்கோபுரம் 97 10/15 பக். 13 பாரா 4]
3. மாற்கு 13:8-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘வேதனைகள்’ எவற்றைக் குறிக்கின்றன? [மார்ச் 11, காவற்கோபுரம் 08 3/15 பக். 12 பாரா 2]
4. லூக்கா தனது சுவிசேஷப் பதிவை எழுதும்போது எந்தப் பதிவுகளை அலசி ஆராய்ந்தார்? (லூக். 1:3) [மார்ச் 18, காவற்கோபுரம் 09 3/15 பக். 32 பாரா 4]
5. நம்முடைய உத்தமத்தைப் பரீட்சிப்பதற்கு சாத்தான் ‘நல்ல சந்தர்ப்பத்தை’ தேடுகிறான் என்ற விஷயம் என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்? (லூக். 4:13) [மார்ச் 25, காவற்கோபுரம் 11 1/15 பக். 23 பாரா 10]
6. லூக்கா 6:27, 28-லுள்ள பதிவை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? [மார்ச் 25, காவற்கோபுரம் 08 5/15 பக். 8 பாரா 4]
7. மீட்புப் பலியைச் செலுத்துவதற்கு முன்பே இயேசுவால் எப்படி ஒரு பெண்ணின் பாவத்தை மன்னிக்க முடிந்தது? (லூக். 7:37, 48) [ஏப். 1, காவற்கோபுரம் 10 8/15 பக். 6-7]
8. கிறிஸ்துவின் சீடர்கள் எந்தக் கருத்தில் தங்களுடைய உறவினர்களை “வெறுக்க” வேண்டும்? (லூக். 14:26) [ஏப். 15, காவற்கோபுரம் 08 3/15 பக். 32, பாரா 1; காவற்கோபுரம் 92 10/15 பக். 9, பாரா. 3-5]
9. “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள்” தோன்றுவது மனிதர்களை எப்படிப் பாதிக்கும்? (லூக். 21:25) [ஏப். 22, காவற்கோபுரம் 97 4/1 பக். 15, பாரா. 8-9]
10. மிகக் கடினமான சோதனைகளை எதிர்ப்படும்போது இயேசு ஜெபித்த விதத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (லூக். 22:44) [ஏப். 29, காவற்கோபுரம் 07 8/1 பக். 6, பாரா 2]