உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 102:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பல காலத்துக்கு முன்னால் நீங்கள் பூமிக்கு அஸ்திவாரம் போட்டீர்கள்.

      வானத்தை உங்கள் கைகளால் உருவாக்கினீர்கள்.+

  • ஏசாயா 42:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவாதான் உண்மையான கடவுள்.

      வானத்தைப் படைத்தவர் அவர்தான், அதை விரித்தவர் அவர்தான்.+

      பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் அவர்தான்.+

      எல்லாருக்கும் உயிர்மூச்சு கொடுத்தவரும்,+ பூமியில் நடமாடுகிற எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரும் அவர்தான்.+

      அவர் இப்படிச் சொல்கிறார்:

  • ஏசாயா 45:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார்.+ அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார்.+

      அவர் அதைக் காரணம் இல்லாமல்* படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.+

      அவர் சொல்வது இதுதான்:

      “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.

  • ரோமர் 1:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை,+ கடவுள்தன்மை+ ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.+ அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.

  • எபிரெயர் 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதோடு, “எஜமானே, ஆரம்பத்தில் நீங்கள் பூமிக்கு அஸ்திவாரம் போட்டீர்கள்; வானத்தை உங்கள் கைகளால் உருவாக்கினீர்கள்.

  • வெளிப்படுத்துதல் 4:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “எங்கள் கடவுளாகிய யெகோவாவே,* நீங்கள் மகிமையும்+ மாண்பும்+ வல்லமையும்+ பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்,+ உங்களுடைய விருப்பத்தின்படியே* அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று சொன்னார்கள்.

  • வெளிப்படுத்துதல் 10:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 என்றென்றும் வாழ்கிறவரும்,+ வானத்தையும் அதில் இருக்கிறவற்றையும் பூமியையும் அதில் இருக்கிறவற்றையும் கடலையும் அதில் இருக்கிறவற்றையும் படைத்தவருமான+ கடவுளின் பெயரில் அவர் ஆணையிட்டு, “இனியும் தாமதமாகாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்