18 அவளுடைய (உயிர் ஊசலாடிக்கொண்டிருந்ததால்) உயிர் போகும் நேரத்தில், அவள் தன்னுடைய மகனுக்கு பெனொனி என்று பெயர் வைத்தாள். அவனுடைய அப்பாவோ அவனுக்கு பென்யமீன்+ என்று பெயர் வைத்தார். 19 ராகேல் இறந்துபோனாள். எப்பிராத்துக்கு, அதாவது பெத்லகேமுக்கு,+ போகும் வழியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.