உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அவளுக்காக ஆபிராமை பார்வோன் நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவருக்கு ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான்.+

  • ஆதியாகமம் 26:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் பயிர் செய்யத் தொடங்கினார். யெகோவா அவரை ஆசீர்வதித்ததால்+ அந்த வருஷத்தில் விதைத்ததைவிட 100 மடங்கு அதிகமாக அறுவடை செய்தார்.

  • ஆதியாகமம் 26:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அவருக்கு ஏராளமான ஆடுமாடுகளும் நிறைய வேலைக்காரர்களும் இருந்தார்கள்.+ அதையெல்லாம் பார்த்து பெலிஸ்தியர்கள் வயிற்றெரிச்சல்பட்டார்கள்.

  • ஆதியாகமம் 31:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பின்பு, யாக்கோபு எழுந்து தன்னுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றினார்.+ 18 பதான்-அராமிலே சேர்த்த எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு,+ அங்கே சம்பாதித்த எல்லா மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு, கானான் தேசத்திலுள்ள தன்னுடைய அப்பா ஈசாக்கிடம் போவதற்குப் புறப்பட்டார்.+

  • ஆதியாகமம் 46:33, 34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘என்ன தொழில் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34 ‘உங்கள் அடிமைகளாகிய நாங்கள் சிறு வயதிலிருந்தே எங்கள் முன்னோர்களைப் போல ஆடுமாடுகளை வளர்த்துவருகிறோம்’+ என்று சொல்லுங்கள். அப்போதுதான், நீங்கள் கோசேன் பிரதேசத்தில் குடியிருக்க முடியும்.+ ஏனென்றால், ஆடு மேய்க்கிறவர்களைக் கண்டாலே எகிப்தியர்களுக்குப் பிடிக்காது”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்