உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நோவாவின் வரலாறு இதுதான்.

      நோவா நீதிமானாக இருந்தார்.+ அவருடைய காலத்தில் வாழ்ந்த ஜனங்களில் அவர் குற்றமற்றவராக இருந்தார். அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.*+

  • எபிரெயர் 10:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 “நீதிமானாக இருக்கிற என் ஊழியனோ விசுவாசத்தால் வாழ்வு பெறுவான்;+ அவன் பின்வாங்கினால் அவன்மேல் எனக்குப் பிரியம் இருக்காது” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

  • எபிரெயர் 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 விசுவாசத்தால்தான் நோவா,+ பார்க்காதவற்றைப் பற்றிக் கடவுளிடமிருந்து எச்சரிப்பு கிடைத்தபோது+ கடவுள்பயத்தைக் காட்டினார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டினார்;+ இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார்,+ அதே விசுவாசத்தால்தான் நீதிமான்களில் ஒருவரானார்.

  • 1 பேதுரு 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+

  • 2 பேதுரு 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பூர்வ உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை;+ நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா+ உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றினார்,+ கடவுள்பக்தி இல்லாதவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்தார்.+

  • 2 பேதுரு 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்யவும்,+ அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்காக விட்டுவைக்கவும்+ யெகோவா* அறிந்திருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்