9 அப்போது யெகோவாவின் தூதர் அவளிடம், “நீ உன் எஜமானியிடம் திரும்பிப் போ; அவளுக்கு அடங்கி நட” என்றார். 10 அதுமட்டுமல்ல, யெகோவாவின் தூதர் அவளிடம், “யாருமே எண்ண முடியாத அளவுக்கு நான் உன் சந்ததியைப் பெருக வைப்பேன்”+ என்று சொன்னார்.
20 இஸ்மவேலைப் பற்றி நீ சொன்னதைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். அவனிடமிருந்து 12 தலைவர்கள் தோன்றுவார்கள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன்.+