-
யோசுவா 22:31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 அதனால் குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ், ரூபன் வம்சத்தாரையும் காத் வம்சத்தாரையும் மனாசே வம்சத்தாரையும் பார்த்து, “யெகோவா நம் நடுவில் இருக்கிறார் என்பதை இன்று நாங்கள் தெரிந்துகொண்டோம். ஏனென்றால், யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யவில்லை. இஸ்ரவேலர்களை இப்போது யெகோவாவின் கையிலிருந்து காப்பாற்றியிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.
-
-
நியாயாதிபதிகள் 20:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ அதன் முன்னால் சேவை செய்துவந்தார். அப்போது இஸ்ரவேல் ஆண்கள் அவரிடம், “எங்களுடைய சகோதரர்களாகிய பென்யமீனியர்களோடு மறுபடியும் போருக்குப் போகலாமா அல்லது போரை விட்டுவிடலாமா?”+ என்று கேட்டார்கள். அதற்கு யெகோவா, “போங்கள், நாளைக்கு அவர்களை உங்கள் கையில் கொடுப்பேன்” என்று சொன்னார்.
-