உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 8:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 நீ என்னுடைய ஜனங்களை அனுப்பாவிட்டால், உன்மேலும் உன் ஊழியர்கள்மேலும் ஜனங்கள்மேலும் வீடுகள்மேலும் கொடிய ஈக்களை* வர வைப்பேன். எகிப்தியர்களுடைய வீடுகளில் அந்த ஈக்கள் மொய்க்கும். அவர்கள் நிற்கிற தரைகளையும்கூட அவை மூடிவிடும். 22 ஆனால் அந்த நாளில், என் ஜனங்கள் வாழ்கிற கோசேன் பிரதேசத்தை மட்டும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அங்கு ஈக்களே வராது.+ அப்போது, யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.+

  • யாத்திராகமம் 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 யெகோவாவாகிய நான் உன் கால்நடைகளைத் தாக்குவேன்.+ குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுமாடுகள் எல்லாவற்றையும் கொடிய கொள்ளைநோயால் தண்டிப்பேன்.+

  • யாத்திராகமம் 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யெகோவா அடுத்த நாளே அதைச் செய்தார். எகிப்திலிருந்த எல்லா கால்நடைகளும் செத்துப்போயின.+ ஆனால், இஸ்ரவேலர்களுடைய கால்நடைகளில் ஒன்றுகூட சாகவில்லை.

  • யாத்திராகமம் 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவே இல்லை.+

  • யாத்திராகமம் 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இஸ்ரவேல் ஜனங்களையோ அவர்களுடைய மிருகங்களையோ பார்த்து ஒரு நாய்கூட குரைக்காது. அப்போது, யெகோவா எகிப்தியர்களை எப்படி நடத்துகிறார், இஸ்ரவேலர்களை எப்படி நடத்துகிறார் என்று நீ தெரிந்துகொள்வாய்’”+ என்றார்.

  • யாத்திராகமம் 12:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட இரத்தம் நீங்கள் இருக்கிற வீடுகளுக்கு அடையாளமாக இருக்கும். நான் எகிப்து தேசத்தைத் தாக்கும்போது அந்த இரத்தத்தைப் பார்த்து உங்களைக் கடந்துபோய்விடுவேன்; நான் கொடுக்கும் தண்டனையால் நீங்கள் அழிந்துபோக மாட்டீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்