உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 39:7-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அப்போது, அவருடைய எஜமானின் மனைவி அவரைக் காமக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தாள். “என்னோடு படு!” என்றும் கூப்பிட்டாள். 8 ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல், “என் எஜமான் இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் என் கையில் ஒப்படைத்திருக்கிறார். என் பொறுப்பில் இருக்கிற எதைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. 9 இந்த வீட்டிலேயே எனக்குத்தான் நிறைய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். எதையுமே அவர் எனக்குத் தராமல் இருக்கவில்லை, உங்களைத் தவிர! ஏனென்றால், நீங்கள் அவருடைய மனைவி! அப்படியிருக்கும்போது, நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?”+ என்று சொன்னார்.

  • உபாகமம் 5:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+

  • நீதிமொழிகள் 6:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்கிறவன் புத்தி இல்லாதவன்.

      அவன் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+

  • மத்தேயு 5:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’+ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன்+ அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.*+

  • ரோமர் 13:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஏனென்றால், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது,+ கொலை செய்யக் கூடாது,+ திருடக் கூடாது,+ பேராசைப்படக் கூடாது”+ என்ற கட்டளைகளும் மற்ற எல்லா கட்டளைகளும், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்ற ஒரே கட்டளையில் அடங்கியிருக்கின்றன.+

  • 1 கொரிந்தியர் 6:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பாலியல் முறைகேட்டிலிருந்து* விலகி ஓடுங்கள்.+ ஒரு மனிதன் செய்கிற வேறெந்தப் பாவமும் உடலோடு நேரடியாகச் சம்பந்தப்படாதது. ஆனால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்.+

  • எபிரெயர் 13:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின்* புனிதத்தைக் கெடுக்காதீர்கள்.+ ஏனென்றால், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்