-
லேவியராகமம் 2:3-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+
4 அடுப்பில் சுட்ட ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், அதை நைசான மாவில் செய்ய வேண்டும். அது எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டியாகவோ எண்ணெய் தடவிய புளிப்பில்லாத மெல்லிய ரொட்டியாகவோ இருக்க வேண்டும்.+
5 வட்டக் கல்லில் சுட்ட ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால்,+ புளிப்பில்லாத நைசான மாவில் எண்ணெய் கலந்து அதைச் செய்ய வேண்டும். 6 பின்பு அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதன்மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.+ இது உணவுக் காணிக்கை.
7 வாணலியில் செய்த ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், அதை நைசான மாவிலும் எண்ணெயிலும் செய்ய வேண்டும்.
-