-
எண்ணாகமம் 3:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 “குருவாகிய ஆரோனின் முன்பாக லேவி கோத்திரத்தாரை+ நிறுத்து. அவர்கள் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.+ 7 வழிபாட்டுக் கூடாரம்* சம்பந்தமாகக் கொடுக்கப்படுகிற எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். ஆரோனுக்கும் எல்லா ஜனங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் சந்திப்புக் கூடாரத்துக்கு* முன்னால் செய்து முடிக்க வேண்டும்.
-
-
எண்ணாகமம் 18:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 உன் தகப்பனின் கோத்திரமான லேவி கோத்திரத்தைச் சேர்ந்த உன் சகோதரர்களை உனக்கும் உன் மகன்களுக்கும் ஒத்தாசையாக வைத்துக்கொள்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் முன்னால் சேவை செய்வதில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.+ 3 நீ கொடுக்கும் பொறுப்புகளையும் வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பொறுப்புகளையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.+ ஆனால், பரிசுத்த இடத்தின் பாத்திரங்களுக்கும் பலிபீடத்துக்கும் பக்கத்தில் அவர்கள் வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்களும் செத்துவிடுவார்கள், நீங்களும் செத்துவிடுவீர்கள்.+
-
-
1 நாளாகமம் 23:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 சந்திப்புக் கூடாரத்தில் செய்ய வேண்டிய வேலைகள், பரிசுத்த இடத்தில் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதோடு, இவர்களுடைய சகோதரர்களான ஆரோனின் வம்சத்தாருக்கு யெகோவாவின் ஆலயத்தில் உதவி செய்ய வேண்டும்.
-