-
யாத்திராகமம் 23:31-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 உங்கள் எல்லை செங்கடலிலிருந்து பெலிஸ்தியர்களின் கடல்* வரைக்கும், வனாந்தரத்திலிருந்து ஆறு* வரைக்கும் இருக்கும்.+ அங்கிருக்கிற ஜனங்களை உங்கள் கையில் கொடுப்பேன், அவர்களை நீங்கள் துரத்தியடிப்பீர்கள்.+ 32 அவர்களுடனோ அவர்கள் தெய்வங்களுடனோ நீங்கள் ஒப்பந்தம் செய்யக் கூடாது.+ 33 அவர்கள் உங்களுடைய தேசத்தில் குடியிருக்கக் கூடாது. அப்படிக் குடியிருந்தால், எனக்கு எதிராக உங்களைப் பாவம் செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கினால், அது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிடும்”+ என்றார்.
-
-
உபாகமம் 7:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது. அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது. உங்களுடைய மகன்களுக்கு அவர்களுடைய மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது.+ 4 ஏனென்றால், உங்கள் மகன்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் செய்துவிடுவார்கள்.+ அப்போது யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். அவர் உங்களை ஒரு நொடியில் அழித்துவிடுவார்.+
-
-
யோசுவா 23:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 நீங்கள் அவரைவிட்டு விலகி, உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற தேசத்தாருடன்+ சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் பண்ணினால்,*+ நீங்களும் அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பழகினால், 13 உங்கள் கடவுளாகிய யெகோவா இனி அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்திவிட மாட்டார்+ என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், உங்கள் முதுகுக்குச் சாட்டையாகவும்,+ உங்கள் கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
-
-
நியாயாதிபதிகள் 2:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அதோடு, ‘நீங்கள் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது,+ அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை.+ ஏன் இப்படிச் செய்தீர்கள்? 3 அதனால்தான் நான் உங்களிடம், ‘மற்ற தேசத்தாரை உங்களிடமிருந்து நான் துரத்தியடிக்க மாட்டேன்.+ அவர்கள் உங்களை ஆபத்தில் சிக்க வைப்பார்கள்.+ அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருக்கும்’+ என்று சொன்னேன்” என்றார்.
-