உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 23:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீங்கள் அவரைவிட்டு விலகி, உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற தேசத்தாருடன்+ சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் பண்ணினால்,*+ நீங்களும் அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பழகினால், 13 உங்கள் கடவுளாகிய யெகோவா இனி அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்திவிட மாட்டார்+ என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், உங்கள் முதுகுக்குச் சாட்டையாகவும்,+ உங்கள் கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

  • 1 ராஜாக்கள் 11:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பார்வோனின் மகளை+ மட்டுமல்லாமல், மோவாபிய,+ அம்மோனிய,+ ஏதோமிய, சீதோனிய,+ ஏத்திய+ பெண்கள் என மற்ற தேசத்துப் பெண்கள் பலரையும் சாலொமோன் ராஜா நேசித்தார்.+ 2 ஆனால், அந்தத் தேசத்து மக்களைப் பற்றி யெகோவா ஏற்கெனவே இஸ்ரவேலர்களுக்கு எச்சரிப்பு கொடுத்திருந்தார்; “நீங்கள் அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது,* அவர்களும் உங்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் சம்பந்தம் வைத்தால், அவர்கள் கண்டிப்பாக உங்கள் மனதை மாற்றி, தங்களுடைய தெய்வங்களை வணங்க வைத்துவிடுவார்கள்”+ என்று சொல்லியிருந்தார். ஆனால் சாலொமோன் அந்தப் பெண்கள்மீது* கொள்ளை ஆசை வைத்திருந்தார், அவர்களை நேசித்தார்.

  • எஸ்றா 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர்களுடைய குடும்பங்களிலிருந்து தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண் எடுக்கிறார்கள்.+ பரிசுத்த சந்ததியாகிய+ இவர்கள் இப்போது வேறு தேசத்தாரோடு ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.+ அதிகாரிகளும் துணை அதிகாரிகளும்தான் இதில் முக்கியக் குற்றவாளிகள்” என்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்