-
யோசுவா 13:2-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 மீதி இருக்கும் அந்தப் பகுதிகள்+ இவைதான்: பெலிஸ்தியர்களுக்கும் கேசூரியர்களுக்கும் சொந்தமான பிரதேசங்கள்+ 3 (அதாவது, எகிப்துக்குக் கிழக்கே உள்ள நைல் நதியின் கிளை நதியிலிருந்து* வடக்கே எக்ரோனியர்களின் எல்லை வரையுள்ள பிரதேசங்கள்; இது முன்பு கானானியர்களின் பகுதியாகக்+ கருதப்பட்டது); பெலிஸ்தியர்களின்+ ஐந்து தலைவர்கள் ஆட்சி செய்த காசா, அஸ்தோத்,+ அஸ்கலோன்,+ காத்,+ எக்ரோன்+ ஆகிய ஊர்கள்; தெற்கே உள்ள ஆவீமியர்களின்+ பிரதேசம்; 4 கானானியர்களின் முழு தேசம்; ஆப்பெக் வரைக்கும் எமோரியர்களின் எல்லை வரைக்கும் உள்ள சீதோனியர்களுக்குச்+ சொந்தமான மெயாரா; 5 கேபாலியர்களின் தேசம்+ மற்றும் கிழக்கே எர்மோன் மலையின் அடிவாரத்திலுள்ள பாகால்-காத்திலிருந்து லெபோ-காமாத்+ வரையுள்ள* லீபனோன் முழுவதும்; 6 லீபனோன்+ தொடங்கி மிஸ்ரபோத்-மாயீம்+ வரையுள்ள மலைப்பகுதியில் குடியிருக்கிறவர்களின் பகுதிகள் மற்றும் சீதோனியர்களின்+ பகுதிகள். இங்கே வாழ்பவர்களை இஸ்ரவேலர்களின் கண் முன்னால் நான் துரத்திவிடுவேன்.+ நான் உனக்குக் கட்டளை கொடுத்தபடியே, அதை நீ இஸ்ரவேலர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.+
-