17 அப்போது, நான் இறங்கி வந்து+ உன்னோடு பேசுவேன்.+ நான் உனக்குக் கொடுத்திருக்கிற சக்தியில்+ கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் வைப்பேன். ஜனங்களைக் கவனித்துக்கொள்ள அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். ஜனங்கள் எல்லாரையும் இனி நீ தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை.+
8 அவனிடம் நான் நேருக்கு நேராகப் பேசுகிறேன்.+ மர்மமாகப் பேசாமல் தெளிவாகப் பேசுகிறேன். யெகோவாவாகிய நான் அவன் முன்னால் தோன்றுகிறேன். அப்படியிருக்கும்போது, என்னுடைய ஊழியனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்றார்.