-
எண்ணாகமம் 22:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பெயோரின் மகன் பிலேயாமைக்+ கூட்டிக்கொண்டு வருவதற்காக பாலாக் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினான். பிலேயாமுடைய தேசத்தின் ஆற்றுக்கு* பக்கத்தில் இருக்கிற பெத்தூருக்கு அவர்களை அனுப்பி, “எகிப்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கிறது. தேசமெங்கும் அவர்கள் பரவியிருக்கிறார்கள்,+ என் எதிரிலேயே குடியிருக்கிறார்கள். 6 அவர்கள் என்னைவிட பலசாலிகள். அதனால், தயவுசெய்து நீங்கள் வந்து எனக்காக அவர்களைச் சபியுங்கள்.+ அப்போது ஒருவேளை நான் அவர்களைத் தோற்கடித்து, இந்தத் தேசத்தைவிட்டுத் துரத்தியடிக்க முடியும். ஏனென்றால், நீங்கள் யாரை ஆசீர்வதிக்கிறீர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், யாரைச் சபிக்கிறீர்களோ அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொல்லச் சொன்னான்.
-