உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+

  • உபாகமம் 30:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+

  • 2 நாளாகமம் 30:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்தால், உங்களுடைய சகோதரர்களையும் மகன்களையும் பிடித்துக்கொண்டு போனவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள்,+ அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்கே திருப்பி அனுப்புவார்கள்.+ உங்கள் கடவுளான யெகோவா கரிசனையுள்ளவர்,* இரக்கமுள்ளவர்.+ நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் முகத்தைத் திருப்பிக்கொள்ள மாட்டார்”+ என்று சொன்னார்கள்.

  • நெகேமியா 9:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 அப்போதும்கூட மிகுந்த இரக்கம் காட்டி, அவர்களை அழிக்காமல் விட்டீர்கள்.+ நீங்கள் கரிசனையும்* இரக்கமும் உள்ள கடவுள்+ என்பதால் அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றினீர்கள்.

  • ஏசாயா 54:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 “கொஞ்சக் காலத்துக்கு* உன்னை நான் கைவிட்டேன்.

      ஆனால், மிகுந்த இரக்கத்தோடு உன்னைத் திரும்பவும் சேர்த்துக்கொள்வேன்.+

  • ஏசாயா 55:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,

      கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,

      நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+

      அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்