-
உபாகமம் 12:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவற்றை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில், உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் சாப்பிட வேண்டும்.+ நீங்களும், உங்கள் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும் அவற்றைச் சாப்பிட வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்கள் என்ன வேலை செய்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.
-
-
உபாகமம் 14:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில் தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பாகத்தையும், ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் நீங்கள் சாப்பிட வேண்டும்.+ அப்படிச் செய்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எப்போதும் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வீர்கள்.+
-
-
சங்கீதம் 32:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 நீதிமான்களே, யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுங்கள்.
நேர்மையான நெஞ்சமுள்ளவர்களே, சந்தோஷ ஆரவாரம் செய்யுங்கள்.
-