உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நீ இவர்களிடம், ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* என் காதுபட நீங்கள் பேசியபடியே உங்களுக்குச் செய்வேன்.+

  • எண்ணாகமம் 14:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 யெகோவாவாகிய நான் இதைச் சொல்லியிருக்கிறேன். எனக்கு எதிராக ஒன்றுகூடிய இந்தப் பொல்லாத ஜனங்களை நான் தண்டிப்பேன். இந்த வனாந்தரத்தில் அவர்களுக்கு முடிவு வரும், இங்கேயே அவர்கள் செத்துப்போவார்கள்.+

  • எண்ணாகமம் 32:10-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதனால், அந்த நாளில் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அப்போது அவர், 11 ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசத்தைப்+ பார்க்கப்போவதில்லை.+ ஏனென்றால், அவர்கள் முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படியவில்லை. 12 யெகோவாவாகிய எனக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்த+ கெனிசியனான எப்புன்னேயின் மகன் காலேபையும்+ நூனின் மகன் யோசுவாவையும்+ தவிர வேறு யாரும் அதைப் பார்க்கப்போவதில்லை’ என்று ஆணையிட்டுச் சொன்னார்.+

  • உபாகமம் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 காதேஸ்-பர்னேயாவிலிருந்து நடக்கத் தொடங்கி, சேரெத் பள்ளத்தாக்கைக் கடப்பதற்குள் 38 வருஷங்கள் ஓடிவிட்டன. அதற்குள், போர்வீரர்களாகிய அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் யெகோவா ஆணையிட்டுச் சொன்னபடியே இறந்துபோனார்கள்.+

  • சங்கீதம் 95:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்”+ என்று

      கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.

  • எபிரெயர் 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதனால் ‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்