28பின்பு அவர், “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உன் அண்ணன் ஆரோனையும்+ அவனுடைய மகன்களான+ நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியவர்களையும் கூப்பிட்டுக்கொண்டு வா. அவர்கள் எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வார்கள்.+
10 குருமார்களாகச் சேவை செய்ய ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நீ நியமிக்க வேண்டும்.+ ஆனால், தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.
8 அப்போது, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கவும்,+ யெகோவாவின் சன்னிதியில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதம் வழங்கவும்+ லேவி கோத்திரத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ இன்றுவரை அவர்கள் இதையெல்லாம் செய்துவருகிறார்கள்.