உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 13:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ராட்சதர்களின் வம்சத்தில் வந்த ஏனாக்கியர்களை அங்கே பார்த்தோம்.+ அந்த ராட்சதர்களுக்குப் பக்கத்தில் நாங்கள் வெறும் வெட்டுக்கிளிகளைப் போலத் தெரிந்தோம். அவர்களும் எங்களை அப்படித்தான் பார்த்தார்கள்.”

  • எண்ணாகமம் 14:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அந்த ராத்திரி முழுவதும் சத்தமாக அழுது புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.+ 2 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+ “நாம் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போனால்கூட பரவாயில்லை! 3 யெகோவா எதற்காக நம்மை அந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போய் எதிரிகளின் வாளுக்குப் பலியாக்கப் பார்க்கிறார்?+ நம் மனைவிமக்களை அந்த ஜனங்கள் பிடித்து வைத்துக்கொள்வார்களே.+ எகிப்துக்குத் திரும்பிப் போவதுதான் நல்லது” என்றெல்லாம் முணுமுணுத்தார்கள்.+

  • எண்ணாகமம் 32:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய்+ அந்தத் தேசத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, யெகோவா தரப்போவதாய்ச் சொல்லியிருந்த தேசத்துக்குப் போக நினைத்தவர்களின் ஆர்வத்தைக் கெடுத்தார்கள்.+

  • உபாகமம் 1:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நாம் போகப்போகிற இடம் எப்படி இருக்குமோ? அதைப் பார்த்துவிட்டு வந்த நம் சகோதரர்கள், “அங்கிருக்கிற ஆட்கள் நம்மைவிட பலசாலிகள், உயரமானவர்கள். அவர்களுடைய நகரங்கள் ரொம்பவே பெரியதாக இருக்கின்றன. அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு உயரமாக இருக்கின்றன.+ அங்கே நாங்கள் ஏனாக்கியர்களைப்+ பார்த்தோம்” என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்புகிறார்களே’+ என்று புலம்பினீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்