-
உபாகமம் 21:18-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஒருவேளை ஒரு மகன் பிடிவாதக்காரனாகவும், அடங்காதவனாகவும், அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்காதவனாகவும் இருக்கலாம்.+ அவனைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் அவன் திருந்தாமல் இருந்தால்,+ 19 அவர்கள் அவனைப் பிடித்து நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம் கொண்டுபோக வேண்டும். 20 அங்கே அவர்களிடம், ‘இந்தப் பையன் ரொம்பப் பிடிவாதக்காரனாக இருக்கிறான், அடங்குவதே கிடையாது. எங்கள் பேச்சைக் கேட்பதே இல்லை. எப்போது பார்த்தாலும் குடித்துக்கொண்டும்+ தின்றுகொண்டும்+ இருக்கிறான்’ என்று சொல்ல வேண்டும். 21 அப்போது, அந்த நகரத்தின் ஆண்கள் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். இப்படி, உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.+
-