உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீங்கள் அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அப்போது, இந்த விதிமுறைகளைப் பற்றிக் கேள்விப்படுகிற ஜனங்களுக்கு முன்னால் ஞானமும்+ புத்தியும்*+ உள்ளவர்களாக இருப்பீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்து, ‘இந்த மாபெரும் தேசத்தைச் சேர்ந்த ஜனங்கள் உண்மையிலேயே ஞானமும் புத்தியுமுள்ள ஜனங்கள்’ என்று சொல்வார்கள்.+

  • உபாகமம் 8:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் சொத்துகளைச் சம்பாதிக்க உங்களுக்குச் சக்தி தருகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.+ உங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவே அவர் அப்படிச் செய்கிறார். இன்றுவரை அதை நிறைவேற்றியும் வந்திருக்கிறார்.+

  • யோசுவா 1:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு. என் ஊழியன் மோசே உனக்குக் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் கவனமாகக் கடைப்பிடி. அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப் போகாதே,+ அப்போதுதான் நீ எல்லாவற்றையும் ஞானமாகச் செய்வாய்.+ 8 இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு.+ அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி.*+ அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய்.+

  • 1 ராஜாக்கள் 2:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உன்னுடைய கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; மோசேயின் திருச்சட்டத்திலுள்ள சட்டதிட்டங்களையும் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் நினைப்பூட்டுதல்களையும் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.+ அப்போது, நீ எதைச் செய்தாலும், எங்கே போனாலும் உனக்கு வெற்றி கிடைக்கும்.*

  • சங்கீதம் 103:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால், யெகோவா காட்டுகிற மாறாத அன்பு

      அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மேல் என்றென்றுமே இருக்கும்.+

      அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகள்மேல் அவருடைய நீதி தங்கும்.+

      18 அவருடைய ஒப்பந்தத்தின்படி நடக்கிறவர்களின் மேலும்,+

      அவருடைய ஆணைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்கிறவர்களின் மேலும் அது தங்கும்.

  • லூக்கா 11:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அதற்கு அவர், “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்