-
உபாகமம் 20:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஆனால் பக்கத்தில் இருக்கிற நகரங்களையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருப்பதால் அங்குள்ள எல்லாரையும்* ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+
-
-
யோசுவா 23:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 நீங்கள் அவரைவிட்டு விலகி, உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற தேசத்தாருடன்+ சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் பண்ணினால்,*+ நீங்களும் அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பழகினால், 13 உங்கள் கடவுளாகிய யெகோவா இனி அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்திவிட மாட்டார்+ என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், உங்கள் முதுகுக்குச் சாட்டையாகவும்,+ உங்கள் கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
-