16 யூதாவின் மலைப்பகுதியையும் நெகேபு+ முழுவதையும் கோசேன் பகுதி முழுவதையும் சேப்பெல்லாவையும்+ அரபாவையும்+ இஸ்ரவேலின் மலைப்பகுதியையும் அதன் தாழ்வான பிரதேசத்தையும் யோசுவா கைப்பற்றினார்.
44 அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+