உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

  • உபாகமம் 28:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 நீங்கள் யெகோவாவைவிட்டு விலகி கெட்ட வழியில் போனால், நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் அவர் சாபத்தையும் குழப்பத்தையும் தண்டனையையும் வரவைப்பார். நீங்கள் அடியோடு அழிந்துபோகும்வரை இதையெல்லாம் வரவைப்பார்.+

  • யோசுவா 23:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த ஒப்பந்தத்தை மீறி மற்ற தெய்வங்களைக் கும்பிட்டால், யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வரும்.+ அவர் தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள்”+ என்று சொன்னார்.

  • 2 நாளாகமம் 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால் அவர் ஆசாவிடம் போய், “ஆசா ராஜாவே! யூதா, பென்யமீன் மக்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் யெகோவாவின் பக்கம் இருக்கும்வரை அவர் உங்களுடன் இருப்பார்.+ அவரைத் தேடினால் அவரைக் கண்டடைய உங்களுக்கு உதவி செய்வார்.+ நீங்கள் அவரை விட்டுவிட்டால், அவரும் உங்களை விட்டுவிடுவார்.+

  • ஏசாயா 63:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால் அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல்,+ அவருடைய சக்தியைத் துக்கப்படுத்தினார்கள்.+

      அதனால், அவர் அவர்களுடைய எதிரியாக மாறினார்.+

      அவர்களோடு போர் செய்தார்.+

  • எரேமியா 17:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே,

      உங்களைவிட்டு விலகிப்போகிற* எல்லாரும் அவமானம் அடைவார்கள்.

      உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களின் பெயர்கள் மண்ணில்தான் எழுதப்படும்.+

      ஏனென்றால், வாழ்வு தரும் நீரூற்றாகிய யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்