-
எண்ணாகமம் 23:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அவர் சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா?
அவர் சொன்னதை நிறைவேற்றாமல் இருப்பாரா?+
-
-
1 சாமுவேல் 2:31-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 ஒரு காலம் வரும், அப்போது உன் பலத்தையும் உன் முன்னோர்களுடைய வம்சத்தாரின் பலத்தையும் அழிப்பேன். அதனால், உன் வம்சத்தாரில் ஒருவன்கூட முதிர்வயதுவரை உயிரோடிருக்க மாட்டான்.+ 32 இஸ்ரவேலர்கள் என்னுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போது, நான் குடியிருக்கிற இடத்தில் நீ எதிரியைப் பார்ப்பாய்.+ உன் வம்சத்தில் இனி யாரும் முதிர்வயதுவரை உயிரோடிருக்க மாட்டார்கள். 33 என் பலிபீடத்தில் சேவை செய்ய உன் வம்சத்தில் நான் யாரை விட்டுவைக்கிறேனோ, அவனால் உன் கண்கள் இருண்டுபோகும், உன் மனம் துக்கத்தில் துவண்டுபோகும். உன் வம்சத்தாரில் ஏராளமானவர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ 34 நான் சொன்னதெல்லாம் நடக்கும் என்பதற்கு அடையாளமாக, உன் மகன்கள் ஓப்னியும் பினெகாசும் ஒரே நாளில் செத்துப்போவார்கள்.+
-