-
1 சாமுவேல் 20:41பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
41 வேலைக்காரப் பையன் போனவுடன், தெற்குப் பக்கமாக இருந்த இடத்திலிருந்து தாவீது எழுந்து வந்தார். பின்பு மண்டிபோட்டு, மூன்று தடவை தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். அதன்பின் அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துவிட்டு, அழுதார்கள். தாவீதுதான் ரொம்பவே அழுதார்.
-
-
1 சாமுவேல் 23:16-18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 தாவீதைப் பார்க்க சவுலின் மகனாகிய யோனத்தான் ஓரேசுக்குப் போனார். யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவர் தாவீதுக்கு உதவினார்.*+ 17 அவர் தாவீதிடம், “பயப்படாதே, என் அப்பா உன்னை எதுவும் செய்ய முடியாது. நீதான் இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பாய்,+ நான் உனக்கு அடுத்தபடியாகத்தான் இருப்பேன். இது என் அப்பாவுக்கும் தெரியும்”+ என்றார். 18 பின்பு, இரண்டு பேரும் யெகோவாவின் முன்னால் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.+ தாவீது ஓரேசில் தங்கினார், யோனத்தானோ தன் வீட்டுக்குத் திரும்பினார்.
-