உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 24:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அவர் தன்னுடைய ஆட்களிடம், “யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற* என் எஜமான்மேல் கை வைப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. யெகோவாவின் பார்வையில் இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்யவே மாட்டேன். ஏனென்றால், இவரை யெகோவாவே தேர்ந்தெடுத்திருக்கிறார்”+ என்றார். 7 இப்படிச் சொல்லி தாவீது தன் ஆட்களைத் தடுத்தார்,* சவுலைத் தாக்க அவர்களை அனுமதிக்கவில்லை. சவுலோ குகையிலிருந்து எழுந்து வெளியே போனார்.

  • 1 சாமுவேல் 26:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால் தாவீது அபிசாயிடம், “அவரை ஒன்றும் செய்துவிடாதே! யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல்*+ கை வைத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து யாராவது தப்பிக்க முடியுமா?”+ என்று கேட்டார்.

  • 1 சாமுவேல் 26:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல் கை வைப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!+ அது யெகோவாவின் பார்வையில் பெரிய பாவம். அதனால், நீ தயவுசெய்து அவருடைய தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும் தண்ணீர் ஜாடியையும் எடுத்துக்கொள், நாம் போகலாம்” என்றார்.

  • சங்கீதம் 3:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 யெகோவாவே, ஏன் இத்தனை பேர் என் எதிரிகளாகிவிட்டார்கள்?+

      ஏன் இத்தனை பேர் எனக்கு எதிராகக் கிளம்பிவிட்டார்கள்?+

       2 “கடவுள் அவனைக் காப்பாற்ற மாட்டார்”

      என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.+ (சேலா)*

  • சங்கீதம் 7:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யெகோவாவே, என் கடவுளே, உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+

      என்னைப் பாடாய்ப் படுத்துகிற எல்லாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.+

  • சங்கீதம் 71:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

      என்னைக் கொல்லத் துடிப்பவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.+

      11 “கடவுள் அவனைக் கைவிட்டுவிட்டார்.

      அவனைத் துரத்திப் பிடியுங்கள்.

      அவனைக் காப்பாற்ற யாருமே இல்லை” என்று சொல்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்