4 பின்பு, பெலிஸ்தியர்களுடைய முகாமிலிருந்து ஒரு மாவீரன் வந்தான். அவனுடைய பெயர் கோலியாத்.+ அவன் காத்+ நகரத்தைச் சேர்ந்தவன். அவனுடைய உயரம் சுமார் ஒன்பது அடி, ஆறு அங்குலம்.*
7 அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல்+ இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல்* எடையுள்ளதாக இருந்தது. அவனுடைய கேடயத்தைச் சுமந்தவன் அவனுக்கு முன்னால் நடந்துவந்தான்.