20 யெகோவா என் நீதிக்குப் பலன் தருகிறார்.+
கறைபடியாத என் கைகளுக்குப் பலன் கொடுக்கிறார்.+
21 நான் எப்போதும் யெகோவாவின் வழிகளில் நடக்கிறேன்.
என் கடவுளைவிட்டு நான் விலகவில்லை, அந்தப் பாவத்தை நான் செய்யவில்லை.
22 அவருடைய நீதித்தீர்ப்புகளைக் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.
அவருடைய சட்டதிட்டங்களை அலட்சியம் செய்ய மாட்டேன்.
23 அவர் முன்னால் எப்போதும் குற்றமற்றவனாக இருப்பேன்.+
தவறு செய்யாமல் ஜாக்கிரதையாக இருப்பேன்.+
24 யெகோவா என் நீதிக்குப் பலன் தரட்டும்.+
கறைபடியாத என் கைகளுக்குப் பலன் கொடுக்கட்டும்.+