-
1 நாளாகமம் 28:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 பின்பு ஆலயத்தின் நுழைவு மண்டபம்,+ அதன் அறைகள், சாமான் அறைகள், மாடி அறைகள், உட்புற அறைகள், பிராயச்சித்த மூடி வைக்கப்பட்டிருக்கிற அறை*+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான வரைபடத்தை+ தாவீது தன்னுடைய மகன் சாலொமோனுக்குக் கொடுத்தார். 12 யெகோவாவின் ஆலயப் பிரகாரங்கள்,+ அதைச் சுற்றியுள்ள சாப்பாட்டு அறைகள், உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பொக்கிஷ அறைகள், பரிசுத்த* பொருள்களை வைக்கும் பொக்கிஷ அறைகள்+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான எல்லா விவரங்களும் அடங்கிய அந்த வரைபடத்தை, அதாவது கடவுளுடைய சக்தியால் தனக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த வரைபடத்தை, சாலொமோனிடம் கொடுத்தார்.
-
-
2 நாளாகமம் 3:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 பின்பு, சாலொமோன் எருசலேமிலிருந்த மோரியா மலையில்+ யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்.+ அவருடைய அப்பாவான தாவீதுக்கு யெகோவா தரிசனம் தந்த இடத்தில்,+ அதாவது ஆலயம் கட்டுவதற்காக எபூசியனான ஒர்னானின் களத்துமேட்டில் தாவீது தயார் செய்திருந்த இடத்தில்,+ அதைக் கட்டத் தொடங்கினார். 2 சாலொமோன் ராஜாவாக ஆன நான்காம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியில், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்.
-