-
யோசுவா 20:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அந்த நகரங்கள் அடைக்கல நகரங்களாகப் பிரித்து வைக்கப்பட்டன. தெரியாத்தனமாகக் கொலை செய்துவிடுகிற இஸ்ரவேலனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ தப்பியோடுவதற்காகவும்,+ ஜனங்களின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்படுவதற்கு முன்பே பழிவாங்குபவனால் கொல்லப்படாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.+
-
-
நியாயாதிபதிகள் 9:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 பிற்பாடு, யெருபாகாலின் மகனாகிய அபிமெலேக்கு+ சீகேமிலிருந்த தன்னுடைய தாய்மாமன்களிடம் போய், அவர்களிடமும் தன் தாத்தா* குடும்பத்தார் எல்லாரிடமும், 2 “‘யெருபாகாலின் 70 மகன்கள்+ உங்களை ஆட்சி செய்வது நல்லதா, அல்லது ஒரு ஆள் மட்டும் உங்களை ஆட்சி செய்வது நல்லதா?’ என்று சீகேமின் தலைவர்களிடம்* தயவுசெய்து கேளுங்கள். நான் அவர்களுடைய சொந்த இரத்தம்* என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்” என்று சொன்னான்.
-