20சீரியாவின்+ ராஜாவான பெனாதாத்+ தன்னுடைய முழு படையையும் திரட்டிக்கொண்டு சமாரியாவை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். தன்னோடு 32 ராஜாக்களையும் அவர்களுடைய குதிரைகளையும் ரதங்களையும் கொண்டுவந்தான்; அவன் சமாரியாவை+ முற்றுகையிட்டு,+ அதற்கு எதிராகப் போர் செய்தான்.
24 பின்பு பாபிலோன், கூத்தா, ஆவா, காமாத், செப்பர்வாயிம்+ ஆகிய இடங்களிலிருந்த மக்களை அசீரிய ராஜா கொண்டுவந்து, இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக அவர்களை சமாரியா நகரங்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியா நகரங்களைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருந்தார்கள்.