உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 9:23, 24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 கடைசியாக, மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போனார்கள். பின்பு, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்.+

      யெகோவா தன்னுடைய மகிமையை எல்லா ஜனங்களுக்கும் காட்டினார்.+ 24 யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து,+ பலிபீடத்தின் மேலிருந்த தகன பலியையும் கொழுப்புத் துண்டுகளையும் விழுங்கியது. ஜனங்கள் எல்லாரும் அதைப் பார்த்தபோது, சந்தோஷமாகக் கோஷம்போட்டார்கள். பின்பு, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.+

  • உபாகமம் 4:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 உங்கள் கடவுளாகிய யெகோவா, சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+

  • நியாயாதிபதிகள் 6:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு யெகோவாவின் தூதர் தன்னுடைய கையிலிருந்த தடியை நீட்டி, அதன் நுனியால் இறைச்சியையும் புளிப்பில்லாத ரொட்டிகளையும் தொட்டார். உடனே, அந்தப் பாறையிலிருந்து நெருப்பு வந்து இறைச்சியையும் புளிப்பில்லாத ரொட்டிகளையும் சுட்டெரித்தது.+ அப்போது, யெகோவாவின் தூதர் அவருடைய கண் முன்னாலிருந்து மறைந்தார்.

  • 1 நாளாகமம் 21:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,+ தகன பலிகளையும் சமாதான பலிகளையும் தாவீது கொடுத்தார்; அவர் யெகோவாவிடம் வேண்டிக்கொண்டபோது, வானத்திலிருந்து நெருப்பு வந்து தகன பலிக்கான பலிபீடத்தின் மேலிருந்த பலிகளைச் சுட்டெரித்தது;+ இப்படி, கடவுள் அவருக்குப் பதில் கொடுத்தார்.

  • 2 நாளாகமம் 7:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 சாலொமோன் ஜெபம் செய்து முடித்ததுமே,+ வானத்திலிருந்து நெருப்பு வந்து+ தகன பலியையும் மற்ற பலிகளையும் சுட்டெரித்தது. ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்