-
2 நாளாகமம் 23:18-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பின்பு, யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பை குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் யோய்தா கொடுத்தார். யெகோவாவின் ஆலயத்தைக் கவனித்துக்கொள்வதற்காக தாவீது அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தபடியே யோய்தாவும் அவர்களைப் பிரித்து, மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடி+ யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்துவதற்காகவும்+ தாவீது சொல்லியிருந்தபடி சந்தோஷமாகப் பாடல்கள் பாடுவதற்காகவும் அவர்களை நியமித்தார். 19 எந்த விதத்திலாவது தீட்டுப்பட்ட ஆட்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக யெகோவாவின் ஆலயக் கதவுகளுக்குப் பக்கத்தில் வாயிற்காவலர்களை நிறுத்தினார்.+ 20 நூறு வீரர்களுக்குத் தலைவர்களையும்,+ முக்கியப் பிரமுகர்களையும், மக்களை ஆளுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, ராஜாவை யெகோவாவின் ஆலயத்திலிருந்து அரண்மனைக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவந்தார். அவர்கள் எல்லாரும் ‘உயர்ந்த நுழைவாசல்’ வழியாக அரண்மனைக்கு வந்து, யோவாசை சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்கள்.+ 21 அத்தாலியாளை வாளால் வெட்டிக் கொன்றதால், மக்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள், நகரத்தில் நிம்மதி நிலவியது.
-