உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 24:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+ 13 பின்பு, யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் இருந்த எல்லா பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டான்.+ யெகோவாவின் ஆலயத்தில் இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கச் சாமான்கள்+ எல்லாவற்றையும் நொறுக்கிப்போட்டான். யெகோவா சொன்னபடியே இது நடந்தது.

  • 2 ராஜாக்கள் 25:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+

  • 2 நாளாகமம் 36:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அந்தச் சமயத்தில், யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை பாபிலோனுக்குக் கொண்டுபோய்த் தன்னுடைய அரண்மனையில் வைத்தான்.+

  • 2 நாளாகமம் 36:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த எல்லா பாத்திரங்களையும் அவன் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். பெரிய பாத்திரங்கள், சிறிய பாத்திரங்கள் என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனான். யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும், ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சொந்தமான பொக்கிஷங்களையும் கொண்டுபோனான்.+

  • எரேமியா 27:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இப்போது யெகோவாவின் ஆலயத்திலும் யூதாவின் ராஜாவுடைய அரண்மனையிலும் எருசலேமிலும் இருக்கிற மீதி பாத்திரங்களைக் குறித்து இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: 22 ‘“அவை பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.+ நான் நடவடிக்கை எடுக்கும் நாள்வரை அவை அங்கேயே இருக்கும். பின்பு, நான் அவற்றை மறுபடியும் இந்த இடத்துக்கே கொண்டுவருவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”

  • தானியேல் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 உண்மைக் கடவுளான யெகோவா, யூதாவின் ராஜா யோயாக்கீமை நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுத்துவிட்டார்.+ அதோடு, ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு போவதற்கும் விட்டுவிட்டார். அவன் அந்தப் பாத்திரங்களை சினேயார்*+ தேசத்திலிருந்த தன் தெய்வத்தின் கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய், அதன் பொக்கிஷ அறையில் வைத்தான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்